SRM Institute of Science & Technology

News & Events

SRM FSH Campus
Event image
25-31 Jul 2026

சிறார் இலக்கியம் அன்றும் இன்றும்

எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் நிறுவனம் இராமாபுரம், மொழி, பண்பாடு, சமுதாயம் - துறையின் முன்னெடுப்பில் 25.07.2026 முதல் 31.07.2026 வரை நடைபெற்ற "சிறார் இலக்கியம் அன்றும் இன்றும்" என்ற இணையவழி 7 நாள் பன்னாட்டு ஆசிரியர்திறன் மேம்பாட்டுப்  பயிற்சி (International Faculty Development program - Online) இனிதே நடைபெற்றது.  இப்பயிற்சியில் சிறார் இலக்கியத்தில் தொடர்ந்து இயங்கி வரும் ஆளுமைகள், பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் கலந்துகொண்டு உரையாற்றி, பங்கேற்பாளர்களின் கேள்விகளுக்கும் ஐயங்களுக்கும் பதிலளித்தனர்.

பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் இருந்து ஏறத்தாழ நூற்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் இதில் கலந்து கொண்டனர். சிறார் இலக்கியத் தோற்றம், வரலாறு, போக்கு, அழ.வள்ளியப்பா போன்ற முன்னோடிகளின் முன்னெடுப்பு,  தற்கால சிறார் இலக்கிய நிலை, தமிழ் மொழியின் சிறார் இலக்கியங்கள், அயல்நாட்டு சிறார் இலக்கியங்கள் பற்றிய அறிமுகம், கல்வியில் சிறார் இலக்கியங்களின் பங்கு, சிறார் இலக்கியத்தில் அரசியல் மற்றும் சமூக சிக்கல்கள், சமூக ஊடகங்களின் தாக்கம், சிறார் இலக்கியத்தில் AI தொழில்நுட்ப தாக்கமும் தடம் மாற்றமும், சிறார் இலக்கியங்களில் குழந்தைகளுக்கு நாட்டம் ஏற்படுத்தும் பணிகள், வயதிற்கேற்ற சிறார் இலக்கியப் படைப்பாக்கம் எனப் பல களங்கள் நிகழ்வில் பேசப்பட்டுப் பயிற்சி வழங்கப்பட்டது. இணையத்தில்இணைந்த பேராசிரியர்களாலும், ஆய்வாளர்களாலும், மாணவர்களாலும் இந்த நிகழ்வு தம் நோக்கத்தை அடைந்துள்ளது. அவர்களின் பங்கேற்கும் ஒத்துழைப்புக்கும் மொழி, பண்பாடு மற்றும் சமுதாயம் -துறையின் சார்பில் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

Event Gallery

சிறார் இலக்கியம் அன்றும் இன்றும் | SRM FSH | SRM Faculty of Science & Humanities, Ramapuram