SRM Institute of Science & Technology

News & Events

SRM FSH Campus
Event image
--

உலகத் தாய் மொழி தின விழா

உலகத் தாய் மொழி தின விழா –
எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் மானுடவியல் புலத்தின் ஆங்கிலம், மொழிகள் துறை தமிழ்ப் பிரிவு மற்றும் கேம்பஸ் லைஃப் இணைந்து நடத்திய உலகத் தாய்மொழி தினவிழா சிறப்புக் கருத்தரங்கம் 19.02.25 அன்று நடைபெற்றது . தமிழின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வின் ஒரு பகுதியாக மாணவர்களுக்கு மொழிப்பயிற்சிப் போட்டிகள் நடைபெற்றன.
தூயதமிழ் பேசுதல், நாப்பிறழ்ச்சி, தமிழ்ச் சொல் அறிதல் ஆகிய மொழிப்பயற்சிப் போட்டிகளில் முதலாம் ஆண்டு தமிழ் பயிலும் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.
போட்டிகளைத் தொடர்ந்து சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனத்தின் தமிழ்த்துறைத் தலைவர் மற்றும் நிர்வாகவியல் பிரிவின் உதவி இயக்குநர் முனைவர் ப. ஜெயபாரதி அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, “வாழிய செந்தமிழ் ” என்ற பொருளில் தமிழின் சிறப்புகளையும் தாய்மொழியின் முக்கியத்துவத்தையும் மாணவர்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் சிறப்பாக உரை ஆற்றினார். கணினி அறிவியல் மற்றும் வணிகவியல் துறையைச் சார்ந்த 150 மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

Event Gallery