SRM Institute of Science & Technology

News & Events

SRM FSH Campus
Event image
--

பாரதியார் முத்தமிழ் விழா 2025

சென்னை,  இராமாபுரம்
எஸ். ஆர். எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்,  அறிவியல் மற்றும் மானுடவியல் புலம் மொழி, பண்பாடு மற்றும் சமுதாயம்- துறை சார்பாக
பாரதியார் பிறந்த நாள் – முத்தமிழ் விழா
11.12.25 அன்று  முற்பகல் 9 -12.30 மணி வரை மிகச்சிறப்பாக  நடைபெற்றது .

சிற‌ப்பு விருந்தினர்– கலைமாமணி தமிழ்ச்செம்மல்
பேராசிரியர் அரசு பரமேசுவரன்  தமிழ்ப்பேராசிரியர் ( பணி நிறைவு) அரசு கல்லூரி,  நாமக்கல்.

நிகழ்வு- முத்தமிழ் விழா மற்றும் பரிசளிப்பு

6 .12.25 மற்றும் 9.12.25 ஆகிய இரு
தினங்களில்
நடைபெற்ற  பள்ளி மாணவர்களுக்கு  இடையேயான  போட்டிகளில்    வென்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்விற்கு முறையாக அனைவரையும் வரவேற்று தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் சி.இராமாமிர்தம் வரேற்புரை வழங்கினார்.

அறிவியல் மற்றும் மானுடவியல் புலத்தின் முதன்மையர்  முனைவர் s. திருமகன் அவர்கள் தலைமை உரை வழங்கிச் சிறப்பு செய்தார்..
கல்வியியல் துணைமுதல்வர்  முனைவர் புகழேந்தி அவர்கள்  வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித்தார்.
மொழி,
பண்பாடு மற்றும் சமுதாயத் துறைத்தலைவர் முனைவர் ஜெபிலா ஷெர்லின் அவர்கள் நிகழ்வின் சிறப்புவிருந்தினரை அறிமுகம் செய்யும் விதமாக அறிமுக உரை ஆற்றினார்.

அதனைத்தொடர்ந்து
கட்டுரைப்போட்டி, கவிதைப்போட்டி  , ஓவியப்போட்டி,
பேச்சுப்போட்டி  தனிப்பாடல் போட்டி, வினாடி வினா, நடனப்போட்டி, மௌன மொழி நாடகம் ,  உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில்  பங்குகொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்வில்  தமிழ்த்துறை சார்பாக  உருவாக்கப்பட்ட ” படித்ததும் படைத்ததும் ” என்ற இதழானது வெளியிடப்பட்டது…. அதனைத்தொடர்ந்து  விழாவின் சிறப்பு விருந்தினர் கலைமாமணி அரசு பரமேசுவரன் அவர்கள் பாரதியின் பெருமைகளை எடுத்துரைத்து சிறப்பானதொரு விழாஉரை ஆற்றினார்.
போட்டி நடுவர்களாகப் பங்கேற்ற
கணினி அறிவியல் துறை, உயிரித்தொழில்நுட்பவியல் துறை , ஆங்கிலத்துறை, கணினித் துறை, பிரெஞ்ச்  உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த பேராசிரியர்களுக்கு அன்புப் பரிசு வழங்கப்பட்டது.
நிகழ்வில் நிறைவாக பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Event Gallery